மீன் பயன்படுத்தி இயற்கை விவசாயமா?🤔 உர செலவை குறைக்கலாமே!!
மீன் அமிலம் பயிர்களின் மீது தெளிக்கும் போது சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், தழைச்சத்துடன் பல நுண்ணூட்டச் சத்துகளை நிலை நிறுத்திடவும் பயன்படுகிறது.
#மீன்அமிலம் தயாரித்தல்
தேவையான பொருட்கள்
மீன் – 1கிலோ
வெல்லம் -1 கிலோ
மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் வாளி / டிரம் -1
தயாரிக்கும் முறை:
♦காற்றுப் புகாமல் மூடி அமைப்புடைய பிளாஸ்டிக் வாளியில் முதல் அடுக்கில் வெல்லம் அடுத்து மீன் சிறிதளவு, பின் வெல்லம் – மீன் கழிவு என்று சிறிது சிறிதாக போட்டு சுத்தமான குச்சியைக் கொண்டு நன்கு கலக்க வேண்டும்
♦ஒன்றோடு ஒன்று நன்றாக கலந்த பின்பு காற்றுப்புகாதவாறு நன்கு இறுக்கமாக மூடி விட வேண்டும். வெயில் படாத இடத்தில் பாதுகாப்பாக நாய், எலி, பெருச்சாளி போன்ற உயிரினங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு வைக்க வேண்டும்.
♦மீன் அமிலம் 22 நாட்களில் தயாராகிவிடும்.
♦தேன் போன்ற திரவத்தை வடிகட்டி 2 லிட்டர் அளவுடைய டப்பாகளில் நிரப்பி வைத்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் அளவுகள்:
👉தெளிப்பு – 30 மி.லி / 10 லி தண்ணீர்
👉நாற்றுபருவ பயிர்களுக்கு 30-50மி.லி/10 லி தண்ணீர்
👉வளர்சியடைந்த பயிர்கள்
50 -150மி.லி/ 10 லி தண்ணீர்
👉பழமரம் மற்றும் மரப்பயிர்களுக்கு 150- 300மி.லி
👉பாசனம் – 1 ஏக்கருக்கு 500 மி.லி – 2 லிட்டர் வரை பயன்படுத்தலாம்.
பயன்கள்:
👌🏻அனைத்து வகையான பயிர்களுக்கும் மீன் அமிலம் இடுபொருளாக தரலாம்.
மீன் அமிலம் பாசனம் வழியே கொடுத்துவர மண்ணில் தழைச்சத்து உட்பட அனைத்து விதமான சத்துகளும் அதிகரிக்கும்.
👌🏻மீன் அமிலம் தெளிப்பதற்கு பயிர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பின்பற்றவும்.
பயிரி வளர்வதற்கும்; பூக்கும் திறனை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம.
👌🏻 இவற்றை நாமே குறைந்த செலவில் தயாரிக்கலாம். தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் செலவு குறையும் பலன் கூடுதலாக கிடைக்கும். அகையால் குறைந்த செலவை கொண்டு மீன் அமினோ அமிலம் தயாரித்து தரமான பொருட்களை உற்பத்தி செய்து கூடுதல் மகசூல் பெற முயலுவோம்.
75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும்,
25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து (Nitrogen)தரக்கூடியது.
பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்.
தரமான காய்கறிகளை தருகிறது.
பயிர்கள் ஓரே சீராக வளர்கிறது
நுண்ணூயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
சில நேரங்களில் எலி போன்ற விலங்குகளின் தாக்குதலை குறைக்கிறது.
🐟Protein: 40%
🌱Nitrogen: 6.5% ( N )
🍃Phosphorus: 1% ( P)
🌻Potassium: 1.5% ( K)
☘️Sulfur: 0.8%
🥀Sodium: 1.0%
🐚Calcium: 15 ppm
🌾Magnesium: 15 ppm
🌱Ferrous: 5 ppm
🍅Manganese: 5 ppm
🫐Zinc: 17 ppm
🍊Copper: 5 ppm
🫑🫒Boron: 7 ppm
பயன்படுத்தும் பயிர்கள்
காய்கறி , கொடிவகைகள், பணப்பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள், மரப்பயிர்கள், மலர்சாகுபடி, தானியப்பயிர், போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
குறிப்பு :
⚠️இதனை பயிர்களுக்கு அதிகமாக பயன்படுத்தாமல் பரிந்துரை செய்த அளவு பயன்படுத்த வேண்டும்.
இதனை மற்ற இயற்கை இடுபொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.
-Trending Vivasayi
#விவசாயம் #fishaminoacid #fish #farming #organicfarming #agriculture
#மீனமிலம் #மீன்அமிலம் #இயற்கைவிவசாயம் #trendingvivasayi #விவசாயி #Agri #farmingtips
#Fishacid #meenamilam #npk #all19 #fertilizer #organicfertilizer
source